Tuesday, June 8, 2010

Fresh attack on Rameshwaram fishermen

ராமேசுவரம்: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அனுப்பினர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 7-ம் தேதி சுமார் 800 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி இவை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. Read More..

Prabhakaran is my only leader says Ramasamy

கோலாலம்பூர்: பிரபாகரன் மட்டுமே என் தலைவன். இந்தியாவுக்கு நான் வரக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது குறித்து எனக்குக் கவலையில்லை...", என்று கூறியுள்ளார் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி.

முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், ஈழப் போர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதாலும் ராமசாமி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். Read More..

Gotabaya threats Fonseka

லண்டன்: போர் குற்றங்கள் பற்றி சாட்சியம் அளித்தால் சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம், என்று ராஜபக்சேவின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து, விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா. 59 வயதான இவர், போர் முடிவுக்கு பின்னர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் தீவிர பங்கு கொண்டார். Read More..