கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க ஐநா அமைத்துள்ள விசாரணைக் குழுவைக் கலைக்கக் கோரி கொழும்பு ஐநா அலுவலகம் எதிரே சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More..
சென்னை: வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவரை சிங்கள கடற்படை வீரர்கள் கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம். ஆகிய 4 பேர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.
மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா, ஆகிய 4 பேரும் சென்றனர். Read More..