
எங்கள் அகராதியில் இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளரான விசுவநாதன் ருத்திரகுமாரன்.
ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது? Read More..