Wednesday, July 21, 2010

Temporary court in mullaitivu

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் புதன்கிழமை காலை திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்றின் நீதிபதியாக அப்துல் மஜீத் முகமட் ரியால் நியமிக்கப்பட்டு தற்போது சாவகச்சேரி நீதிமன்றில் பதில் நீதிபதியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களை ஒரே நாளில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் போதிய கட்டட வசதிகள் இல்லாமையாலும், குறைந்த எண்ணிக்கையானவர்கள் மீளக்குடியமர்ந்ததாலும் நீதிமன்றத்தை இயக்குவது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு தற்காலிக நீதிமன்றம் மட்டும் இப்போது திறந்துவைக்கப்படுகிறது. Read More..

American foreign affairs ministry team coming to srilanka

இலங்கை மற்றும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இதற்காக இரு நாடுகளுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தங்களது வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தலைமையில் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி வைக்கவுள்ளது. ராபர்ட் பிளேக் தலைமையிலான அமெரிக்க வெளியுறவுக் குழு, இலங்கைக்கு புதன்கிழமை வருகை தரவுள்ளது.

இக்குழு, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்த வழிவகையை ஏற்படுத்தும். Read More..