Tuesday, April 27, 2010

India is the key factor in our victory against lLTTE gotabaya



கொழும்பு: விடுதலைப் புலிகளை வீழ்த்த, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாதான் உதவியது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று சில மாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார்.
இப்போது அவரது தம்பியும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். Read More..

Monday, April 26, 2010

Srilanka new cabinet sworn in


கொழும்பு: இலங்கையில் 76 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. புதிய வெளியுறவு அமைச்சராக ஜி.எல். பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையை ராஜபக்சே அறிவித்துள்ளார். Read More..

Friday, April 23, 2010

LTTEs properties in abroad



கொழும்பு: விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கலாம் என்று தகவல்கல் வெளியாகியுள்ளன.

இத்தகவலை பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதர் ஏ.எம்.ஜெ. சாதிக் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..

Tuesday, April 20, 2010

No more armed war in eelam struggle



எங்கள் அகராதியில் இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளரான விசுவநாதன் ருத்திரகுமாரன்.
ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது? Read More..

Monday, April 19, 2010

Malaysia issues visa to prabhakaran mother



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மையாருக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் விசா வழங்கியது மலேஷிய அரசு.

பார்வதி அம்மையாரை இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து சென்றார் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.
அங்கிருந்து சிகிச்சை பெறுவதற்காக பார்வதி அம்மாள் நேற்று இரவு சென்னை வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். Read More..

Wednesday, April 14, 2010

Seeman speaks on his new party



கோவை: ஈழத் தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

"நாம் தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18 ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும். Read More..

Prabhakaran brother Manoharan interview

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க்கில் வசித்து வரும் மனோகரன் முதல்முதலாக, ஒரு இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டி:

கேள்வி: நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மனோகரன்: நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது. Read More..

Tuesday, April 13, 2010

Prabhakaran house demolished by army


யாழ்ப்பாணம்:வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் இலங்கை இரணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டைச் சென்று பார்வையிடுவதை இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 சாலை திறக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக அந்த வீடு மாறியுள்ளது. Read More..

Army seizes documents of prabhakaran



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆவணங்களும், புகைப்பட ஆல்பம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் கடந்த வாரம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, நிலத்துக்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More..

Monday, April 12, 2010

MIA complaints on srilanka



கொழும்பு: 'இலங்கை அரசு என்னை ஒரு தீவிரவாதியாக முத்திரை குத்த முயற்சி செய்கிறது' என்று பிரபல பாப் இசைப் பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசம் புகார் கூறியுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்த அவர் லண்டன் செல்ல முயன்றபோது, இலங்கை அரசின் நடவடிக்கைகள் காரணமாக சிக்கல்களை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.Read More..

Friday, April 9, 2010

Rajapaksa party wins in Srilankan election


இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கே, சரத் பொன்சேகா போன்றோரது கட்சிகள் பெரும் தோல்வியைத் தழுவின.

இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர் இடங் களை கொண்டது. இதில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் கிடைக்கும் ஓட்டு சதவீத அடிப்படையில் நிரப்பப்படும். Read More

Wednesday, April 7, 2010

Sri Lanka says US must be inquired for its war crimes in iraq



கொழும்பு: ஈராக்கில் அமெரிக்க ராணுவம் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை கூறியுள்ளது.
ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் அமெரிக்காவுக்கும் தனி விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புத்துறையின் செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. Read More..

Monday, April 5, 2010

Fear Continues In Jaffna Says Varadharaja Perumal



கொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், பொதுமக்களிடையே அச்சம் நீடிக்கிறது. குறிப்பாக யாழ் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

1990-ல் இலங்கையை விட்டு வெளியேறியவர் வரதராஜ பெருமாள். புலிகளுக்கு எதிராக இந்திய - இலங்கை அரசுகளால் பொம்மை முதல்வராக அமர வைக்கப்பட்ட அவர், 20 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். Read More..

Sinhalese Destroying Prabhakarans House


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை திட்டமிட்ட முறையில் உடைத்து அழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் சிங்கள வெறியர்கள். Read More..

rajapaksa scolds tamils in his campaign



வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு எதிர்ப்பு காட்டிய தமிழரை திட்டினார் ராஜபக்சே

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். கூட்டத்துக்கு வெறும் 400 பேர் கூட வரவில்லை. இதில் மிகவும் கடுப்படைந்திருந்தார் ராஜபக்சே. More