இலங்கையில் போர்க்குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை சந்திப்பதை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வன்னியில் கடந்த வருடம் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்தார். Read More..
இலங்கையர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கொடி தாங்கிய எம்.வி. சுயஸ் எனும் கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நேற்று அறிவித்துள்ளது. Read More..
நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான 865 இளைஞர், யுவதிகளையும் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்திருக்கும் சுமார் 11 ஆயிரம் பேரையும் இலங்கை அரசு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. Read More..