Monday, May 3, 2010

Treatment for parvathi ammal with conditions karunanidhi



டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

டெல்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -​ அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,​​ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது. Read More..

Rajapaksa pardon tamil journalist



கொழும்பு: தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற இலங்கை செய்தியாளர் கேஎஸ் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இலங்கையில் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியவர் ஜே.எஸ்.திசநாயகம். தமிழரான இவர், தீவிரவாதத்துக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிட்டதாக இலங்கை அரசு அவரை 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. Read More..

Seeman urgent appeal to world tamils



சென்னை: மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பகூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிக்கப்பட்டு வன்னிவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர். Read More..

Parvathi ammal letter to Tamilnadu CM



சென்னை: தமிழகத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. Read More..

Transnational eelam govt election results



பெர்ன்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற சுவிட்ஸர்லாந்து பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் கார்த்திகேயப்பிள்ளை ஆனந்தநடராஜா அறிவித்துள்ளார்.

சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் விபரம் வருமாறு:

தேர்தல் தொகுதி 1 Bern, Solothurn

செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா

வீரகத்தி சுந்தரலிங்கம் Read More..

Srilanka army bombed prabhakaran house



விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை இலங்கை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர். Read More..