Thursday, June 3, 2010

Vaiko owes to achieve Eelam

தஞ்சை: சிங்களவர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார். Read More..

Srilanka urges NDTV to withdraw its documentary

சென்னை: ஈழத் தமிழர் நிலை குறித்து என்டிடிவி ஒளிபரப்பிய டாகுமெண்டரி படத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசு கோரிக்கை வி்டுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்.டி.டி.வி. சமீபத்தில் 'பிளட் ஆன் வாட்டர்' என்ற தலைப்பில் செய்திப் படம் ஒன்றை வெளியிட்டது.

இதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம், என்டிடிவி நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். Read More..

Black flag to Rajapaksa says Pazha Nedumaran

ஜூன் 8ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு எதிராக சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கையில்,

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார். Read More..

Naam organisation ask rehabilitation reconstruction in Lanka

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், இலங்கை அதிபர் ஜூன் 8இல் இந்தியாவிற்கு வருகை புரியும் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் திட்டங்களை வலியுறுத்த வேண்டும் என்று நாம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து நாம் அமைப்பின் தலைவர் ரவி, செயலர் சதாசிவம், நிறுவனர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்தியில். Read More..