Wednesday, July 28, 2010

Indian Envoy Coming to Srilanka

லங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். Read More..

Srilanka Ban Obscene Pictures in Cellphones

செல்போன்களில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு நேற்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப அதிகாரி பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையை வழங்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ஷே வலியுறுத்தியதையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் போலீஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருந்தார். Read More..

Srilankan Tamil Killed in London Mishap - Online Srilankan News

ண்டனில் ஏற்பட்ட சாலை விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானார்.லண்டனில் வசிப்பவர் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன் (35). இவர், சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றார். அதிகாலை நேரத்தில் பத்திரிகை விநியோகம் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று அவர் மீது எதிர்பாராமல் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். Read More..

Srilankan Refugee ship could be boarded by U.S. or Canada - Tamil online News

லங்கை அகதிகள் 200 பேரை ஏற்றிச் செல்வதாக கூறப்படும் எம்.வி. சன் சீ கப்பல் அமெரிக்கா அல்லது கனடா நாட்டின் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் நிர்வாகி கெரி ஆனந்தசங்கரி என்பவரின் தகவல்படி கப்பலில் உள்ள எவரும் இதுவரை உதவி கோரவில்லை என தெரிவித்துள்ளார். Read More..