Sunday, July 25, 2010

Change in indian government on lanka issue

ஈழத் தமிழர் விஷயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதை இந்தியாவுக்கு சமீபத்தில் சென்றபோது எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரையும் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள். Read More..

Rudrakumaran will meet multinational leaders on eelam issue

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.
இதுதொடர்பாக ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. Read More..

Tamil Journalist attacked in srilanka

லங்கையின் மன்னார் மாவட்டத்தில் தமிழ் பத்திரிகையாளர் பி.ஏ. ஆண்டனி மார்க்,வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். மன்னார் மாவட்டத்தில் டெய்லி மிரர்'பத்திரிக்கையின் செய்தியாளராக இருப்பவர் ஆண்டனி மார்க். இவர் மன்னார்-தலைமன்னார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவரிடமிருந்து, சில ஆவணங்களையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.காயமடைந்த ஆண்டனி மார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவ் கொழும்புவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More..