Friday, July 30, 2010

Tv Station Attacked in srilanka

லங்கை தலைநகர் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர்.
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..

LTTE Received No Help After 9/11 Attack

9/11 சம்பவத்துக்குப் பின்னர் புலிகளுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கவில்லை விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..

Thursday, July 29, 2010

Sarath Fonseka Faces New Trial

லங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். Read More..

Wednesday, July 28, 2010

Indian Envoy Coming to Srilanka

லங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். Read More..

Srilanka Ban Obscene Pictures in Cellphones

செல்போன்களில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு நேற்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப அதிகாரி பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையை வழங்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ஷே வலியுறுத்தியதையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் போலீஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருந்தார். Read More..

Srilankan Tamil Killed in London Mishap - Online Srilankan News

ண்டனில் ஏற்பட்ட சாலை விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானார்.லண்டனில் வசிப்பவர் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன் (35). இவர், சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றார். அதிகாலை நேரத்தில் பத்திரிகை விநியோகம் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று அவர் மீது எதிர்பாராமல் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். Read More..

Srilankan Refugee ship could be boarded by U.S. or Canada - Tamil online News

லங்கை அகதிகள் 200 பேரை ஏற்றிச் செல்வதாக கூறப்படும் எம்.வி. சன் சீ கப்பல் அமெரிக்கா அல்லது கனடா நாட்டின் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் நிர்வாகி கெரி ஆனந்தசங்கரி என்பவரின் தகவல்படி கப்பலில் உள்ள எவரும் இதுவரை உதவி கோரவில்லை என தெரிவித்துள்ளார். Read More..

Tuesday, July 27, 2010

No interest in politics: kumaran padmanaban

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என இலங்கை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்குமரன் பத்மநாதனுக்கு வடக்கு மாகாணத்தின் முதல்வர் பதவியை வழங்க அரசாங்கம் திட்டமிடுவதாக அண்மையில் மக்கள் சுதந்திர முன்னணி (ஜே.வி.பி) குற்றம் சுமத்தியிருந்தது. Read More..

Attack on srilankan army

இலங்கையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது தாக்குதலை நடத்தியது விடுதலைப்புலிகளா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் போரில் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் குண்டுகள் வீசி கொல்லப்பட்டதுடன், உள்நாட்டுப்போர் முடிந்து விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். விடுதலைப்புலிகள் யாரும் இலங்கையில் இல்லை என்றும் சிங்கள அரசு அறிவித்தது. Read More..

Sunday, July 25, 2010

Change in indian government on lanka issue

ஈழத் தமிழர் விஷயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதை இந்தியாவுக்கு சமீபத்தில் சென்றபோது எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரையும் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள். Read More..

Rudrakumaran will meet multinational leaders on eelam issue

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.
இதுதொடர்பாக ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. Read More..

Tamil Journalist attacked in srilanka

லங்கையின் மன்னார் மாவட்டத்தில் தமிழ் பத்திரிகையாளர் பி.ஏ. ஆண்டனி மார்க்,வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். மன்னார் மாவட்டத்தில் டெய்லி மிரர்'பத்திரிக்கையின் செய்தியாளராக இருப்பவர் ஆண்டனி மார்க். இவர் மன்னார்-தலைமன்னார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவரிடமிருந்து, சில ஆவணங்களையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.காயமடைந்த ஆண்டனி மார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவ் கொழும்புவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More..

Friday, July 23, 2010

Fonseka will sue srilankan government

இலங்கை நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணிக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்ய சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார்.
Read More..

Srilanka condemned American minister

இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளாக்குக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கூறியதாவது: இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றோ அல்லது 17-வது திருத்தச் சட்டம்தொடர்பாகவோ அவர் எவ்வாறு கருத்து தெரிவிக்கலாம்.
Read More..

Thursday, July 22, 2010

Tamil peoples voting rights cancelled

இலங்கையில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வட இலங்கைப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளது.

இதனால், இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக தெரிவித்துள்ளார். Read More..



American minister meets srilanaka president

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசியுள்ளார். ராபர்ட் பிளேக், ராஜபட்சேவுடனான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகத் தெரியவந்துள்ளது. சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையே உறவுகளை விரிவாக்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்த அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக், பிற்பகலில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேசவுள்ளார். Read More..

Wednesday, July 21, 2010

Temporary court in mullaitivu

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் புதன்கிழமை காலை திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்றின் நீதிபதியாக அப்துல் மஜீத் முகமட் ரியால் நியமிக்கப்பட்டு தற்போது சாவகச்சேரி நீதிமன்றில் பதில் நீதிபதியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களை ஒரே நாளில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் போதிய கட்டட வசதிகள் இல்லாமையாலும், குறைந்த எண்ணிக்கையானவர்கள் மீளக்குடியமர்ந்ததாலும் நீதிமன்றத்தை இயக்குவது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு தற்காலிக நீதிமன்றம் மட்டும் இப்போது திறந்துவைக்கப்படுகிறது. Read More..

American foreign affairs ministry team coming to srilanka

இலங்கை மற்றும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இதற்காக இரு நாடுகளுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தங்களது வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தலைமையில் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி வைக்கவுள்ளது. ராபர்ட் பிளேக் தலைமையிலான அமெரிக்க வெளியுறவுக் குழு, இலங்கைக்கு புதன்கிழமை வருகை தரவுள்ளது.

இக்குழு, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்த வழிவகையை ஏற்படுத்தும். Read More..

Tuesday, July 20, 2010

No special ambassador needed srilanka insisted india

இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். Read More..

Balakumaran yogaratnam killed by srilankan army in the last leg of war

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது இலங்கை படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரத்னம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் இலங்கை படையினரிடம் சரணடைந்திருந்தனர். Read More..

Monday, July 19, 2010

Blame against srilankan tamil people

லங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யான தகவல் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..

Close the srilankan embassy says vaiko

மிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமீபத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர். Read More..

UN team investigating srilanakan war controversy

இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் போர்க் குற்றம் குறித்த விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். Read More..

Srilankan issue PM promises Karunanidhi

லங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும்,​​ கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
​ ​ இதுகுறித்து,​​ முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
​ ​ இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள்.​ இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.​ இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும்,​​ இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
​ ​ ​

Friday, July 16, 2010

Action will be taken against srilanka: stalin

லங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. Read More..

Torturing former LTTEs in srilanka

லங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், தினந்தோறும் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர். Read More..

Thursday, July 15, 2010

Pakistan and Malaysia now aligned against Sri Lanka

லங்கையி்ன் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே அதிர்ச்சியடைந்துள்ளார் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு பாகிஸ்தானும், மலேசியாவும் உதவியிருந்தன. Read More..

Sunday, July 11, 2010

Srilanka permits Chinese for fishing in Nandhi lagoon

கொழும்பு: இலங்கை நந்திக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இலங்கை அரசு.


இந்த முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நொகாரத்தலிங்கம் கூறுகையில், "நீண்டகாலத்திற்குப் பிறகு நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

எனினும், சீனர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். Read More..

Wimal Weerawansa finishes his fast

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க ஐநா சபை பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர்கள் குழுவைக் கலைக்கக் கோரி உண்ணாவிரதமிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தமது உண்ணாவிர போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.


இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து, தண்ணீர் கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More..

Friday, July 9, 2010

UNO closes its Colombo office

நியூயார்க்: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதர் நீல் பூஹ்னேவை நியூயார்க்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.

இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கூறுகையில், "ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை. ஒரு அமைச்சரே இதைச் செய்வதை இலங்கை அனுமதிக்கிறது. இதனைத் தடுத்திருக்க வேண்டும்..." என்றார். Read More..

Thursday, July 8, 2010

Wimal Weerawansa starts his indefinite fast

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க ஐநா அமைத்துள்ள விசாரணைக் குழுவைக் கலைக்கக் கோரி கொழும்பு ஐநா அலுவலகம் எதிரே சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச.


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More..

Srilankan Navy kills Tamil fisherman

சென்னை: வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவரை சிங்கள கடற்படை வீரர்கள் கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர்.

வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம். ஆகிய 4 பேர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.

மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா, ஆகிய 4 பேரும் சென்றனர். Read More..

Wednesday, July 7, 2010

Transnational Eelam Govt condemns Sri Lanka

லங்கையின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் ஐநா விசாரணைக் குழு

நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம், நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.


இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகக் கிளை இலங்கை அதிபருக்கு நெருக்கமான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. Read More..

America supports UN in Lanka Issue

இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தறிய ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு' என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போர் முடிந்தபின்னரும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. Read More..

Sri Lanka Protest continues in front of UNO

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா அமைத்துள்ள சிறப்புக் குழுவை எதிர்த்து கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் இலங்கை அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாகவும் மாறியது.

நிபுணர் குழுவை ஐநா திரும்பப் பெறும் வரை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார். Read More..

India ready to give Visa to Parvathi Ammal

பார்வதி அம்மாள் இந்தியா வரவிரும்பினால் அவருக்கு விசா அளிக்க தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பான பொது நலன் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்விசாரணையின்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசு, 'பார்வதி அம்மாள் தான் தன்னுடைய இந்தியப் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக'க் கூறியிருந்தது. Read more..

Tuesday, July 6, 2010

Parvathi Ammal not willing to come India

சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது இந்த பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். விமான நிலைத்தில் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை. Read More..

Parvathi Ammal Issue Centre explains Chennai High Court

இந்தியாவில் சிகிச்சை பெறும் முடிவை பார்வதி அம்மாள்தான் தள்ளி வைத்தார் என்று மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற தமிழகம் வந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமானநிலையத்தில் இருந்து அப்படியே மலேசியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் .

இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. Read More..