யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.
கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகவும் அங்கு பேசப்படவுள்ள இலங்கை விடயங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read More..