கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பார்வதி அம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் முசிறிக்கு வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அவர் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். Read More..