லண்டன்: கொழும்பில் ஜூனில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழும் இந்த அமைப்பின் சார்பில் ஸ்கந்ததேவா நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சனவரி முதல் மே வரை ஐந்து மாதங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40,000 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, போர் காலத்தில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கைக்கான பிரதிநிதி கோர்டன் வைஸ் உறுதிப்படுத்தியுள்ளார். Read More..