சென்னை: பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம், உறவினர் - நண்பர்களைச் சந்திக்கலாம். ஆனால் புலிகள் ஆதரவு அரசியல் பிரமுகர்களை மட்டும் சந்திக்கக் கூடாது, என்று தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 தேதியிட்டு - மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள். Read More..
Sunday, June 13, 2010
No pressure from India in Tamils resettlement
கொழும்பு: ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எவ்வித நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் (படம்) தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் மறுவாழ்வு விவகாரம் இந்தியா அவரிடம் வலியுறுத்தியாதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து பெரீஸ் கூறுகையில், "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. Read More..

Subscribe to:
Posts (Atom)