Monday, July 19, 2010

Blame against srilankan tamil people

லங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யான தகவல் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..

Close the srilankan embassy says vaiko

மிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமீபத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர். Read More..

UN team investigating srilanakan war controversy

இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் போர்க் குற்றம் குறித்த விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். Read More..

Srilankan issue PM promises Karunanidhi

லங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும்,​​ கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
​ ​ இதுகுறித்து,​​ முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
​ ​ இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள்.​ இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.​ இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும்,​​ இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
​ ​ ​