கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதனே தனக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்தார் என, இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாய ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.
பி.பி.சி உலக சேவைக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
புலம்பெயர் நாடுகளில் இருந்து கே.பியின் ஏற்பாட்டில் கொழும்பு வந்து தம்மைச் சந்தித்தவர்கள், தம்முடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருப்பதாக, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Read More..