கொழும்பு: கே பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு அரசுப் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுலக் தொடர்பாளர் குமரன் பத்மநாபன், அரசாங்க சாட்சியாக மாறி, புலிகளின் சொத்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. Read More..