Wednesday, July 7, 2010

Transnational Eelam Govt condemns Sri Lanka

லங்கையின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் ஐநா விசாரணைக் குழு

நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம், நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.


இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகக் கிளை இலங்கை அதிபருக்கு நெருக்கமான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. Read More..

America supports UN in Lanka Issue

இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தறிய ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு' என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போர் முடிந்தபின்னரும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. Read More..

Sri Lanka Protest continues in front of UNO

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா அமைத்துள்ள சிறப்புக் குழுவை எதிர்த்து கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் இலங்கை அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாகவும் மாறியது.

நிபுணர் குழுவை ஐநா திரும்பப் பெறும் வரை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார். Read More..

India ready to give Visa to Parvathi Ammal

பார்வதி அம்மாள் இந்தியா வரவிரும்பினால் அவருக்கு விசா அளிக்க தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பான பொது நலன் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்விசாரணையின்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசு, 'பார்வதி அம்மாள் தான் தன்னுடைய இந்தியப் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக'க் கூறியிருந்தது. Read more..