இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள். இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும், இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
No comments:
Post a Comment