Monday, July 19, 2010
Close the srilankan embassy says vaiko
தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமீபத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர். Read More..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment