நியூயார்க்: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதர் நீல் பூஹ்னேவை நியூயார்க்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.
இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கூறுகையில், "ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை. ஒரு அமைச்சரே இதைச் செய்வதை இலங்கை அனுமதிக்கிறது. இதனைத் தடுத்திருக்க வேண்டும்..." என்றார். Read More..
No comments:
Post a Comment