இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவை, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசியுள்ளார். ராபர்ட் பிளேக், ராஜபட்சேவுடனான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகத் தெரியவந்துள்ளது. சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையே உறவுகளை விரிவாக்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்த அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக், பிற்பகலில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேசவுள்ளார்.
Read More..
No comments:
Post a Comment