Saturday, May 29, 2010

British Tamil Association appreciates Tamil film Industry

லண்டன்: கொழும்பில் ஜூனில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழும் இந்த அமைப்பின் சார்பில் ஸ்கந்ததேவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சனவரி முதல் மே வரை ஐந்து மாதங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40,000 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, போர் காலத்தில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கைக்கான பிரதிநிதி கோர்டன் வைஸ் உறுதிப்படுத்தியுள்ளார். Read More..

Thursday, May 27, 2010

Naam Tamilar opposes SriLankan Minister In Tamilnadu

வேளாங்கண்ணி: இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். Read More..

Lest We Forget: Tamil Remembrance Day

போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட முதலாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வட கலிபோர்னியாவைச் சேர்ந்த தமிழர்கள் மே 22 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.

இந்த நினைவாஞ்சலியில் இனப்படுகொலைகளைச் சந்தித்த ஆர்மீனியன், ருவாண்டன், குர்தீஸ் மற்றும் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. Read More..

Group of Ministers visits Kilinochi

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டது இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு.

வீடு அமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழுவுக்கும், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடந்தது. Read More..

Wednesday, May 26, 2010

Seeman request to Karunanidhi

மலேசியாவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. Read More..

Protests begin against Indo-SL trade pact

இந்தியாவுடனனான 'சீபா' (Comprehensive Economic Partnership Agreement CEPA) உடன்படிக்கையில் கையழுத்திட வேண்டாம் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீபா எனப்படுகின்ற இந்த உடன்படிக்கை இலங்கையை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் இலங்கை கையெழுத்திட்டால், இலங்கையின் வர்த்தகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், உள்ளாட்டு வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் பாதிப்படைவர் என தெரிவிக்கப்படுகிறது. Read More..

Tuesday, May 25, 2010

Srilanka not allowed any public to Mullaithivu

கொழும்பு: முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத்
தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More..

Monday, May 24, 2010

Srilanka warns UNO

நியூயார்க்:​ எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என ஐக்கிய நாட்டு சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்,​​ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ Read More..

Is Prabhakaran dead or alive?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக இன்னும் பல முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால்

தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று த. தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் அவர்கள் இது குறித்து மேலும் கூறியது:

தலைவர் கடந்த வருடம் மார்ச் 17ஆம் தேதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. Read More..

The pathetic condition of Srilankan Tamils today

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்கள் பதில் அறியத் துடிக்கும் கேள்வி இது. இதற்கான பதிலைத் தருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டி:

புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். Read More..

Thursday, May 20, 2010

Sinhalese army officers confession over mullivaikaal massacre

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாக சிங்கள ராணுவ வீரர் ஒருவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை சேனல் 4 தொலைக்காட்சி முன்பே வெளியிட்டிருந்தது. Read More..

Thursday, May 6, 2010

Indian visa center at jaffna



யாழ்ப்பாணம்: இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மற்றும் விநியோக அலுவலகம் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரவுண் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை, இலங்கைக்கான இந்திய தூதர அசோக் கே காந்தா திறந்து வைத்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவைப் பராமரிக்கும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படுவதாகவும், விரைவில் இந்திய துணை தூதரகம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More..

Wednesday, May 5, 2010

Gotabaya is dangerous to media rights



கொழும்பு: ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களின் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேயின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பத்திரிகையாளர் சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இவர்கள் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதும் தனி நபர்கள் மற்றும் அரச குழுக்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். Read More..

Fonseka begins hunger strike



கொழும்பு: நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சரத் பொன்சேகா.

இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததற்கு ஆட்சேபம் தெரிவித்து, ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. Read More..

Victory march on may 18th Gotabhaya



கொழும்பு: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார்.

ஆனையிறவில் போர் ஹீரோக்கள் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தபின், செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார். Read More..

Tuesday, May 4, 2010

Sri Lanka suspends court martial against fonseka



கொழும்பு:​ இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான ராணுவ நீதிமன்ற விசாரணையை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தற்காலிகமாக தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அவர் மீதான மற்றொரு வழக்கு குறித்து ராணுவ நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. Read More..

Srilanka will ready to face transnational govt of tamil eelam



கொழும்பு: இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் உருவாக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு, வரும் மே 18-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது.

தமிழீழம் என்பது நில ரீதியாக இப்போதைக்கு இல்லாமலிருந்தாலும், நிறுவன ரீதியாக ஜெனீவாவிலிருந்து செயல்படத்துவங்க இருக்கிறது.

இந்த உண்மை புரிந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைக்கும் சதிகளில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. Read More..

Monday, May 3, 2010

Treatment for parvathi ammal with conditions karunanidhi



டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

டெல்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -​ அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,​​ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது. Read More..

Rajapaksa pardon tamil journalist



கொழும்பு: தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற இலங்கை செய்தியாளர் கேஎஸ் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இலங்கையில் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியவர் ஜே.எஸ்.திசநாயகம். தமிழரான இவர், தீவிரவாதத்துக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிட்டதாக இலங்கை அரசு அவரை 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. Read More..

Seeman urgent appeal to world tamils



சென்னை: மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பகூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிக்கப்பட்டு வன்னிவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர். Read More..

Parvathi ammal letter to Tamilnadu CM



சென்னை: தமிழகத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரி பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. Read More..

Transnational eelam govt election results



பெர்ன்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற சுவிட்ஸர்லாந்து பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் கார்த்திகேயப்பிள்ளை ஆனந்தநடராஜா அறிவித்துள்ளார்.

சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் விபரம் வருமாறு:

தேர்தல் தொகுதி 1 Bern, Solothurn

செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா

வீரகத்தி சுந்தரலிங்கம் Read More..

Srilanka army bombed prabhakaran house



விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை இலங்கை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர். Read More..