Tuesday, July 20, 2010

No special ambassador needed srilanka insisted india

இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். Read More..

Balakumaran yogaratnam killed by srilankan army in the last leg of war

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது இலங்கை படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரத்னம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் இலங்கை படையினரிடம் சரணடைந்திருந்தனர். Read More..

Monday, July 19, 2010

Blame against srilankan tamil people

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யான தகவல் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..

Close the srilankan embassy says vaiko

தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கொல்லப்படுவதைக் கண்டித்தும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடிவிட வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமீபத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர். Read More..