போபால் விஷவாயு வழக்கில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று கேள்வி எழுந்தது போல் தமிழக அளவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தப்பவிட்டது யார் என்ற கேள்வி எழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இலங்கையின் பாரம்பரிய மற்றும் சிறுதொழில்கள் துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருக்கிறார். அவர் தற்போது இலங்கை அதிபர் ராஜபக்சே குழுவுடன் இந்தியா வந்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை காவல்துறையில் நிலுவையில் உள்ளது. அப்போது அவர் தேடப்படும் குற்றவாளி என்று சென்னை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். Read More..
No comments:
Post a Comment