சென்னை: கோவையில் நாளை துவங்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தனக்கு எந்தவித அழுத்தங்களும் தரப்படவில்லை என்று தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.
செம்மொழி மாநாட்டில், முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்துள்ளார் பேராசிரியர் சிவத்தம்பி.
மாநாட்டில் கட்டாயம் சிவத்தம்பி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பங்கேற்கா விட்டால் அது நாதஸ்வரம் இல்லாத கல்யாணம் மாதிரியாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதியே மீண்டும் மீண்டும் சிவத்தம்பிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. Read More..
No comments:
Post a Comment