Friday, July 30, 2010

Tv Station Attacked in srilanka

இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர்.
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..

LTTE Received No Help After 9/11 Attack

9/11 சம்பவத்துக்குப் பின்னர் புலிகளுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கவில்லை விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..

Thursday, July 29, 2010

Sarath Fonseka Faces New Trial

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். Read More..

Wednesday, July 28, 2010

Indian Envoy Coming to Srilanka

இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். Read More..