Friday, July 16, 2010

Action will be taken against srilanka: stalin

இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. Read More..

Torturing former LTTEs in srilanka

இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், தினந்தோறும் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர். Read More..

Thursday, July 15, 2010

Pakistan and Malaysia now aligned against Sri Lanka

இலங்கையி்ன் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே அதிர்ச்சியடைந்துள்ளார் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு பாகிஸ்தானும், மலேசியாவும் உதவியிருந்தன. Read More..

Sunday, July 11, 2010

Srilanka permits Chinese for fishing in Nandhi lagoon

கொழும்பு: இலங்கை நந்திக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இலங்கை அரசு.


இந்த முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நொகாரத்தலிங்கம் கூறுகையில், "நீண்டகாலத்திற்குப் பிறகு நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

எனினும், சீனர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். Read More..