Tuesday, June 22, 2010

Srilanka opposes to UNO committee to inquire human rights violation

கொழும்பு: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை குழு அமைப்பதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஐநா கூறிய பிரச்னைகளை அரசு உரிய வகையில் அணுகி தீர்வு கண்டுவரும் நிலையில் இத்தகைய குழு தேவையற்றது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசு மீது கடுமையான புகார் எழுந்தது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. Read More..

Thursday, June 17, 2010

Prabhakaran mother health condition becomes very weak

கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பார்வதி அம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் முசிறிக்கு வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அவர் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். Read More..

Wednesday, June 16, 2010

Panruti S. Ramachandran exposed the truth in Douglas case

தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, மத்திய அரசு விருந்தாளியாக வரவேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூட்டில், "இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலமே எனக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது!" எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு பறந்திருக்கிறார் டக்ளஸ்!


இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போதைய தே.மு.தி.க. அவைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி. Read More..

US praises Rajapaksa

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் வென்ற ராஜபக்சேவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முக்கிய பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More..