Wednesday, June 2, 2010

It is our fight says Ka Sivathambi on Eelam struggle

யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகவும் அங்கு பேசப்படவுள்ள இலங்கை விடயங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read More..

Tuesday, June 1, 2010

How is Parvathi Ammal

சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். Read More..

Srilanka firm on IIFA event

கொழும்பு: என்ன தடைகள், இடையூறுகள் வந்தாலும் ஐஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்தியே தீருவோம் என இலங்கை சுற்றுலா விரிவாக்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக தற்போது இந்திய அளவில் பெரும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த பிரிவின் பிரதிநிதி திலீப் முதாதெனிய தெரிவித்துள்ளார்.

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டின் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவது குறித்தும் கேட்கப்பட்டது. Read More..

Saturday, May 29, 2010

British Tamil Association appreciates Tamil film Industry

லண்டன்: கொழும்பில் ஜூனில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழும் இந்த அமைப்பின் சார்பில் ஸ்கந்ததேவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சனவரி முதல் மே வரை ஐந்து மாதங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40,000 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, போர் காலத்தில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கைக்கான பிரதிநிதி கோர்டன் வைஸ் உறுதிப்படுத்தியுள்ளார். Read More..