Tuesday, June 1, 2010

Srilanka firm on IIFA event

கொழும்பு: என்ன தடைகள், இடையூறுகள் வந்தாலும் ஐஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்தியே தீருவோம் என இலங்கை சுற்றுலா விரிவாக்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக தற்போது இந்திய அளவில் பெரும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த பிரிவின் பிரதிநிதி திலீப் முதாதெனிய தெரிவித்துள்ளார்.

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டின் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவது குறித்தும் கேட்கப்பட்டது. Read More..

Saturday, May 29, 2010

British Tamil Association appreciates Tamil film Industry

லண்டன்: கொழும்பில் ஜூனில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழும் இந்த அமைப்பின் சார்பில் ஸ்கந்ததேவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சனவரி முதல் மே வரை ஐந்து மாதங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40,000 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, போர் காலத்தில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கைக்கான பிரதிநிதி கோர்டன் வைஸ் உறுதிப்படுத்தியுள்ளார். Read More..

Thursday, May 27, 2010

Naam Tamilar opposes SriLankan Minister In Tamilnadu

வேளாங்கண்ணி: இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். Read More..

Lest We Forget: Tamil Remembrance Day

போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட முதலாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வட கலிபோர்னியாவைச் சேர்ந்த தமிழர்கள் மே 22 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.

இந்த நினைவாஞ்சலியில் இனப்படுகொலைகளைச் சந்தித்த ஆர்மீனியன், ருவாண்டன், குர்தீஸ் மற்றும் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. Read More..